இலங்கை
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர் கைது!
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர் கைது!
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர் ஒருவரை தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதான இவர், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களைச் சந்திக்க வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபர் சம்பந்தப்பட்ட அகதிகள் முகாமிலும் தங்கியிருந்துள்ளார். மேலும் இந்திய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பூர்வமாக இலங்கைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
ராமேஸ்வரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் தங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான இலங்கையர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 21 ஆம் திகதிவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
