இலங்கை
கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் பரவியுள்ள விஷ செடிகளை அகற்ற அழைப்பு!
கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் பரவியுள்ள விஷ செடிகளை அகற்ற அழைப்பு!
கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள எமது மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் விஷ செடிகளை அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அதன்படி சூழலில் காணப்படுகின்ற பார்த்தீனிய செடிகளை வேருடன் பிடுங்கி பிரதேச சபை அலுவலகத்தில் கையளிக்கின்ற ஒவ்வொரு கிலோ பாத்தீனியத்துக்கும் இருநூறு ரூபா வழங்கப்படும் .
இந்நடவடிக்கை எதிர்வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது.சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேருடன் பிடுங்கப்படுகின்ற ஒரு கிலோ பாத்தீனிய செடிகளை வழங்கி 200 ரூபாய் கரைச்சி பிரதேச சபையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
பிடுங்குகின்ற போது கைகளில் கையுறை அல்லது ஷெப்பிங் பை போன்ற பாதுகாப்பு கையுறைகளை அணிந்து அதனை அகற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வேருடன் கொண்டு வரப்படுகின்ற செடிகளுக்கு மாத்திரமே பணம் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்க.
இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து இருந்த போது பாத்தீனிய நச்சுவிதைகள் இங்கு பரவியதாக வரலாறு பேசுகிறது. பல தசாப்தங்களாக அழிக்கப்பட முடியாது சவால் விடும் நச்சு செடியாக இது உருவாகி கிளிநொச்சி மண்ணின் மண்வளத்தையும் பசுமையையும் அழிக்கும் நீண்டகால செயற்பாடாக பார்த்தீனிய பரவல் காணப்படுகிறது.
கிளிநொச்சி நகரம் கணேசபுரம் திருநகர் மற்றும் அதன் சுற்றயல்பகுதிகளில் மிக அதிக அளவில் இது காணப்படுகிறது
எனவே எமது மண்ணையும் மக்களை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றாக இணைந்து கிளிநொச்சியின் மண் வளத்தை பாதுகாப்போம்!
லங்கா4 (Lanka4)
அனுசரணை
