பொழுதுபோக்கு
கெளதம் மேனன் விதைத்த ஆசை இது… விஜயின் டயலாக் பார்த்துதான் வளர்ந்தோம்; பிரபல இயக்குநர் பேட்டி
கெளதம் மேனன் விதைத்த ஆசை இது… விஜயின் டயலாக் பார்த்துதான் வளர்ந்தோம்; பிரபல இயக்குநர் பேட்டி
இயக்குநர் சாரன் தியாகு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆரோமலே’. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகன் கிஷன் தாஸ், கதாநாயகி நம்ரிதா மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் கோவையில் பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சாரன் தியாகு, அனைத்துப் பகுதிகளிலும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கோவை மக்களுடன் இணைந்து படம் பார்க்கும்போது அவர்களுடைய வரவேற்பு எங்களை திக்கு முக்காடு செய்கிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததால் எனக்கு கடந்த ஐந்து வருடமாக காதல் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர் பேசியதாவது, தான் எடுக்கும் படம் இயக்குநருக்கு லாபகரமாக அமைய வேண்டும். பார்க்கின்ற மக்கள் எந்த இடத்திலும் சோர்வடையாமல் திருப்தியாக பார்க்க வேண்டும். படத்தில் கதாநாயகன், கதாநாயகி அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அப்பா நடிகர் தியாகு ஆதரவு எனக்கு இருப்பதால் திரையுலகத்தில் பல நண்பர்கள் சப்போர்ட் செய்துள்ளார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, சிறு வயது முதலே நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அவர் படம் பார்த்து, டான்ஸ், டயலாக் பார்த்து தான் நாங்கள் வளர்ந்துள்ளோம். அரசியலை பற்றி சொல்வதற்கு எங்களுக்கு பெரிதாக அரசியல் அனுபவம் இல்லை. புதிதாக அவர் ஆரம்பித்திருக்கும் பயணத்திற்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
