Connect with us

இந்தியா

சென்னை உள்பட 20 நகரங்களில் மெகா ரயில் பராமரிப்பு முனையங்கள்: ரயில்களைக் கையாளும் திறனை இருமடங்கு அதிகரிக்க ரயில்வே திட்டம்

Published

on

railways 3

Loading

சென்னை உள்பட 20 நகரங்களில் மெகா ரயில் பராமரிப்பு முனையங்கள்: ரயில்களைக் கையாளும் திறனை இருமடங்கு அதிகரிக்க ரயில்வே திட்டம்

ரயில்வே மெகா பராமரிப்பு ரயில் முனையங்களை உருவாக்க உள்ளது. ரயில்களைக் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக, நாடு முழுவதும் 20 நகரங்களில் மெகா கோச்சிங் முனையங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை, பண்டிகைகள் மற்றும் குளிர்காலம், கோடைகாலம் போன்ற உச்ச பயணக் காலங்களில் சீரான ரயில் இயக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.ஆங்கிலத்தில் படிக்க:இந்த ‘மெகா ரயில் பராமரிப்பு முனையங்கள்’ ரயில்கள் வந்து சேருவதற்கும் புறப்படுவதற்கும் அதிக தேவை உள்ள 20 தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உருவாக்கப்படும். இந்த முனையங்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய நிலையங்களில் அமைக்கப்படும்.அகமதாபாத்தில் மெகா ரயில் பராமரிப்பு முனையங்கள்தற்போது, ​​அகமதாபாத்தில் இத்தகைய ஒரு முனையம் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ளது. தற்போது அகமதாபாத்தில் இருந்து சுமார் 45 ரயில்கள் புறப்படுகின்றன. ஆனால், புதிய வசதியால், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரத்திலும் மற்றொரு பிரத்யேக மெகா ரயில் பராமரிப்பு முனையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் அகமதாபாத்திற்குச் சென்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,  “டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் போன்ற பெரிய நிலையங்களில் புதிய ரயில்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. குஜராத்தில், அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் அதிகபட்ச தேவை உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், வாத்வாவில் ஒரு மெகா ரயில் பராமரிப்பு முனையம் உருவாக்கப்படும், அங்கு 10 பராமரிப்பு குழித்தடம் கட்டப்படும். இது சுமார் 45 கூடுதல் ரயில்களுக்கான திறனைச் சேர்க்கும், அகமதாபாத் மொத்தம் கிட்டத்தட்ட 150 ரயில்களை இயக்க உதவும்.” என்று கூறினார்.அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு மேலும் 3 நடைமேடைகள்அகமதாபாத் நிலையத்திற்கு மேலும் 3 கூடுதல் நடைமேடைகள் (platforms) கிடைக்கும், இது இரயில்களைக் கையாளும் திறனை மேம்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.  “அனைத்து நடைமேடைகளும் ஒரு கான்கோர்ஸ் கூரை பிளாசா வழியாக இணைக்கப்படும், மேலும் உயர்த்தப்பட்ட சாலையின் கட்டுமானமும் வேகமாக நடைபெற்று வருகிறது. இது கான்கோர்ஸ், உயர்த்தப்பட்ட சாலை மற்றும் நடை மேம்பாலங்கள் வழியாக நிலையத்தின் இரு முனைகளையும் இணைக்கும்” என்று அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன