வணிகம்
டி.வி.எஸ் ஆர்பிட்டர் எலட்க்ரிக் ஸ்கூட்டர் கோவையில் அறிமுகம்; மைலேஜ், விலை நிலவரம் என்ன?
டி.வி.எஸ் ஆர்பிட்டர் எலட்க்ரிக் ஸ்கூட்டர் கோவையில் அறிமுகம்; மைலேஜ், விலை நிலவரம் என்ன?
டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டரான (TVS Orbiter) ஆர்பிட்டர் தென்னிந்தியாவில் முதன்முறையாக கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னனி மோட்டார் சைக்கிள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் டி.வி.எஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப புதிய வாகனங்களை அறிமுகபடுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் நவீன அனைத்து தொழில் நுட்ப அம்சங்களையும் உருவாக்கி மிக நீண்ட இருக்கையையும் கொண்ட ஆர்பிட்டர் ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் இ.வி. வர்த்தக துணை பொது மேலாளர் ரிஷு குமார் புதிய ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகபடுத்தி பேசினார்.அப்போது பேசிய ரிஷூ குமார், ஆர்பிட்டர் இ.வி மாடல் நீளமான இருக்கைகளுடன் குடும்பத்தினர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கும். மேலும் IDC வரம்பு, க்ரூஸ் கண்ட்ரோல், மலைப் பகுதிகளில் பின்னோக்கி நகராமல் பாதுக்கும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 34-லிட்டர் அளவுள்ள விசாலமான பூட்ஸ்பேஸ் மற்றும் பல இணைக்கப்பட்ட நவீன அம்சங்கள் என இரு சக்கர இ.வி வாகன பிரிவிலேயே முதல் முறையாக பல அதி நவீன தொழில் நுட்ப அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எக்ஸ் ஷோரூம் விலையாக ரூபாய் 1,03,100 விலையில் பல்வேறு அசத்தலான வண்ணங்களில் கிடைக்கும் வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பி.ரஹ்மான், கோவை
