இலங்கை
யாழில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் வெளிப்பட்ட அதிர்ச்சி தகவல்
யாழில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் வெளிப்பட்ட அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் , போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தினை சிலர் வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுத்திருப்பது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் , நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அந்நிலையில் கடந்த வாரம் , திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தை பகுதிகளில் போதைப்பொருள் மாபியாக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
சந்தைக்கு வருவோரை துன்புறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் மாபியாக்கள் போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிப்பதற்கான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
