இலங்கை
வேனுடன் நேருக்கு நேர் மோதிய லொறி ; பரிதாபமாக பிரிந்த உயிர்
வேனுடன் நேருக்கு நேர் மோதிய லொறி ; பரிதாபமாக பிரிந்த உயிர்
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலஹருவ பகுதியில், வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற டிப்பர் லொரி, எதிர் திசையில் வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது விபத்தில் காயமடைந்த வேன் சாரதி தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்க கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தனமல்வில பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
