Connect with us

பொழுதுபோக்கு

கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள் ஒன்று எழுதுகிறார்கள்… வெளிச்சத்தில் இருட்டை பார்த்துவிட்டேன்; பிரவீன் ராஜ் உருக்கம்

Published

on

praveen

Loading

கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள் ஒன்று எழுதுகிறார்கள்… வெளிச்சத்தில் இருட்டை பார்த்துவிட்டேன்; பிரவீன் ராஜ் உருக்கம்

விஜய் டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து, கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 8-வது சீசனில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.கமல்ஹாசன் போல் இல்லாவிட்டாலும் தனது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், அகோரி கலையரசன், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம், இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, அரோரா சி.ஜே, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. இதில் சனிக்கிழமை துஷார் வெளியேறினார். ஞாயிற்றுக்கிழமை பிரவீன் ராஜ் வெளியேறினார். பிரவீன் ராஜ் வெளியேறியது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பிரவீன் ராஜ் எவிக்‌ஷன் முறையற்றது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிக்லையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் ராஜ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.#Praveen after the eviction 💥💥#BiggBossTamil9#BiggBoss9Tamilpic.twitter.com/V6QKUX0sDkஅதில், “எவிக்‌ஷன் பார்த்துவிட்டு என்னாலும் முடியவில்லை. அழுது அழுது கை எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ரொம்ப மனசு உடைந்துவிட்டேன். ஒரு வேளை நாம் தவறு செய்துவிட்டோமோ? ஒழுங்காக பர்ஃபாமென்ஸ் செய்யவில்லையோ?  என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிக்பாஸ் சீசன் 9 ஒரு ஸ்ட்ராங், பவர்ஃபுல்லான வெளிச்சம் . அந்த மாதிரி ஒரு வெளிச்சத்தில் எவிக்‌ஷன் என்ற தோல்வியினால் இருட்டை பார்த்துவிட்டோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் மக்கள் அன்பு கிடைத்தது. இந்த எவிக்‌ஷன் ஃபேரா? அன்ஃபேரா என்று தெரியவில்லை. என் கேமை நான் விளையாடினேன். ரொம்ப உடைந்து போய் இருந்த என்னை தூக்கிவிட்டீர்கள். காலம் முழுவதும் என்னுடைய நடிப்பால் உங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன். என்னால் எப்படியெல்லாம் என்டர்டெயின் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் மக்களை என்டர்டெயின் செய்வேன். இது முடிவு என்று நினைத்தேன், ஆனால் மக்கள் அன்பில் இது எங்கயோ போய் கொண்டிருக்கிறது. இருந்தாலும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு சப்போர்ட் செய்த மக்களுக்கு மிகவும் நன்றி. கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள் நீங்கள் ஒரு விதி எழுதுகிறீர்கள்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன