இலங்கை
இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!
இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!
அநுராதபுரம் – தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்தில் 50 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம, ஜெயகங்கா பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ,உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தனியார் பஸ் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
