தொழில்நுட்பம்
ஐபோன் பயனர்களுக்கு குட் நியூஸ்; இனி ஆஃப்லைனிலும் இந்த வசதிகள் கிடைக்கும்!
ஐபோன் பயனர்களுக்கு குட் நியூஸ்; இனி ஆஃப்லைனிலும் இந்த வசதிகள் கிடைக்கும்!
நீங்க டிராவல் செய்யும்போதோ அல்லது மலைப்பாங்கான இடங்களிலோ “நோ சிக்னல்” என்ற வார்த்தையைப் பார்த்து சலித்துப் போனவரா? இனி அந்த கவலை ஐபோன் பயனர்களுக்கு இருக்காது. அவசர காலங்களில் எஸ்.எம்.எஸ். அனுப்ப மட்டும் பயன்பட்டு வந்த ‘செயற்கைக்கோள்’ (Satellite) வசதியை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆப்பிள் தீவிரமாக வேலை செய்து வருகிறது.ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆப்பிள் தனது செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தி பல புதிய அம்சங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. உங்க போனில் மொபைல் நெட்வொர்க், வைஃபை என எதுவும் இல்லாத ஒரு இடத்தில் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்களால் ஆப்பிள் மேப்ஸை பயன்படுத்த முடிகிறது. அதுமட்டுமல்ல, உங்க நண்பர்களுக்கு புகைப்படங்களையும் (Photos) மெசேஜில் அனுப்ப முடிகிறது. இதுதான் ஆப்பிளின் அடுத்த இலக்கு.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்த புதிய அம்சங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேலும் மேம்பட்ட சேவைகளுக்கு பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Airtel, Jio போன்றவை) மூலம் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரலாம். ஆனால், இப்போதைக்கு செயற்கைக்கோள் வழியாக போன் கால்கள், வீடியோ கால்கள், அல்லது இணையதளங்களைப் (Web Browsing) பார்க்கும் வசதியைக் கொண்டுவரும் திட்டம் ஆப்பிளிடம் இல்லை.ஆப்பிள் நிறுவனமே சொந்தமாக செயற்கைக்கோள் சேவையைத் தொடங்கலாமா என்று விவாதித்ததாகவும், ஆனால் அது தங்களை மொபைல் ‘கேரியராக’ மாற்றிவிடும் என்பதால் அந்த யோசனையை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ‘குளோபல்ஸ்டார்’ என்ற நிறுவனத்தின் நெட்வொர்க்கை தான் ஆப்பிள் பயன்படுத்தி வருகிறது. ஆப்பிளின் இந்த புதிய கனவுத் திட்டங்களைச் செயல்படுத்தவே, குளோபல்ஸ்டாரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆப்பிள் பெருமளவு நிதியுதவியும் செய்துள்ளதாம். எதிர்காலத்தில், எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ (SpaceX) போன்ற நிறுவனங்களுடனும் ஆப்பிள் கை கோர்க்க வாய்ப்புள்ளது. மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் ஐபோனைப் பயன்படுத்த முடியும் என்பது, அதன் ஒட்டுமொத்த பயன்பாட்டையே அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.ஐபோன்களில் எதிர்பார்க்கப்படும் புதிய ‘சாட்டிலைட்’ அம்சங்கள்சாட்டிலைட் ஆப்பிள் மேப்ஸ்: இன்டர்நெட் இல்லாமலேயே வழிகாட்டும் மேப்ஸ்.சாட்டிலைட் போட்டோ மெசேஜிங்: நெட்வொர்க் இல்லாத இடத்திலிருந்தும் புகைப்படங்களை அனுப்பலாம்.5G சாட்டிலைட்: 5G தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் இணைப்பை மேம்படுத்துதல்.சாட்டிலைட் API: மற்ற மூன்றாம் தரப்பு செயலிகளும் (Third-party Apps) செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தும் வசதி.’இயற்கையான பயன்பாடு’ (Natural Usage): இதுதான் ஹைலைட்! இனி போனை வானத்தை நோக்கிக் காட்டத் தேவையில்லை. வீட்டிற்குள், கட்டிடங்களுக்குள் இருந்தபடியே செயற்கைக்கோள் இணைப்பு கிடைக்கும்!2026 ஆம் ஆண்டில், ஆப்பிளின் ‘சிரி’ (Siri) உதவியாளர், கூகுளின் சக்திவாய்ந்த ‘ஜெமினி’ (Gemini) AI மாடலுடன் இணைந்து முற்றிலும் புதிய, அதிபுத்திசாலித்தனமான அவதாரத்தை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
