பொழுதுபோக்கு
கேப்டனுக்கு ஜோடியாக 2 படங்கள்; பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்: புகழின் உச்சத்தில் நடிப்பை கைவிட்ட நடிகை!
கேப்டனுக்கு ஜோடியாக 2 படங்கள்; பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்: புகழின் உச்சத்தில் நடிப்பை கைவிட்ட நடிகை!
ஒருவர் எவ்வளவு பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தாலும, திரைப்படத் துறையில் நிலைத்திருப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இருந்தும், சிலர் தங்கள் புகழ் உச்சத்தில் இருக்கும்போது அதை உதறிவிட்டு, வெளிச்சத்தில் இருந்து விலகிச் சென்று, தங்கள் வாழ்க்கையின் முன்னுரிமைகளை நோக்கி, செல்வார்கள். அந்த வகையிலான ஒரு நடிகை தான் ஸ்வப்னா. ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் கொடிகட்டிப் பறந்த நட்சத்திரமாக இருந்து, பாலிவுட்டிலும் கால் பதித்த அவர், பிரகாசமாக உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவுக்கு விடை கொடுத்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:பஞ்சாபில் பிறந்த ஸ்வப்னா கண்ணா, கன்னடத் திரைப்படத் துறையின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இருப்பினும், அவருக்குக் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது மலையாளத் திரைப்படங்கள்தான். புகழ்பெற்ற இயக்குனர் பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய சங்கர்ஷம் (1981) என்ற படத்தில் ரதீஷுடன் அவர் நடித்ததன் மூலம், மலையாளத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து அவருக்குத் தென்னிந்தியா முழுவதும் இருந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதே ஆண்டில், ராஜ் கபூரின் சங்கமத்தின் (1964) ரீமேக்கான, தெலுங்கு-கன்னட இருமொழித் திரைப்படமான ஸ்வப்னாவில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். விஜயகாந்தின் நெஞ்சிலே துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு, கமல்ஹாசனின் கடல் மீன்கள் மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். மேலும், ஐ.வி. சசி-எம்.டி. வாசுதேவன் நாயர் கூட்டணியின் த்ரிஷ்ணா திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம்தான் மம்முட்டியைத் துறையில் ஒரு நடிகராக நிலைநிறுத்த உதவியது. இதில் ஸ்வப்னா ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்த வேடமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கேரக்டரும் கோரும்போது திரையில் சற்று கவர்ச்சியாகத் தோன்ற தயங்காத ஸ்வப்னா, தனது உடல் அழகால் மக்கள் மனதையும் கவர்ந்தார். பல பெண் நடிகைகள், ஆணாதிக்க சமுதாயம் அமைத்த விதிகளுக்கு அப்பாற்பட்ட அல்லது கலவையான உணர்வுகள் கொண்ட கேரக்டர்களை ஏற்றால், ஒரே மாதிரியான வேடங்களில் சிக்கிக்கொள்வோமோ என்று அஞ்சிய காலத்தில், ஸ்வப்னா சிரயோ சிரி மற்றும் ஒரு திரை பின்னேயும் திரை போன்ற படங்களில் அத்தகைய கேரக்டர்களை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டார். எல்லாப் படங்களும் அவரது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவர் விரைவில் ஒரு அழகு ராணியாகவும் வணிகத் திரைப்படங்களின் இன்றியமையாத அங்கமாகவும் முடிசூட்டப்பட்டார். அப்போதைய மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீருடன் அவர் மறுபச்சை, அங்கச்சமயம், ஒரு திரை பின்னேயும் திரை போன்ற படங்களில் நடித்தார். வெளிச்சம் விதரும் பெண்ணுக்குட்டி, போஸ்ட்மார்ட்டம், வரன்மாரே ஆவசியம் உண்டு, ஒன்னு சிரிக்க்கு, பிரேம் நசீரின் கன்மனில, பூகம்பம், விகடகவி போன்ற படங்களில் ஸ்வப்னா தொடர்ந்து வெற்றிப் படிகளைக் கண்டார். இதற்கிடையில், அப்போது வளர்ந்து வரும் நட்சத்திரமான மோகன்லாலுடன் அவர் உயரங்களில், ஸ்வந்தமேவிடே பந்தமேவிடே, கடத்தநாடன் அம்பாடி போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் தோன்றினார். இவற்றில் உயரங்களில் படத்தில் அவரது நடிப்பு அதிக கவனத்தை ஈர்த்தது. அவரது அழகு மற்றும் கவர்ச்சி பற்றிய பாராட்டுக்களுக்கு மத்தியில், இத்தகைய படங்கள் ஸ்வப்னாவை ஒரு வலுவான நடிகையாகவும் நிலைநிறுத்த உதவின. அதே நேரத்தில், அவர் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். அவற்றில், ஜிதேந்திரா-ஜெயப்ரதாவின் ஹக்கீக்கத், தர்மேந்திராவின் ஹக்குமத், ஜாக்கி ஷெராஃபின் தேரி மெஹர்பானியன், திலீப் குமார்-கோவிந்தா-மாதூரி தீட்சித்தின் இஸ்ஸதார், சல்மான் கானின் குர்பான் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தர்மேந்திரா, வினோத் கண்ணா, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி ஆகியோரைக் கொண்ட ஃபரிஷ்தே என்ற மல்டி-ஸ்டாரர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும் ஸ்வப்னா நடித்திருந்தார்.அதே சமயம் அவர் திரைப்படத் துறையில் அதிக காலம் நீடிக்கவில்லை. தொழிலதிபர் ரமண் கண்ணாவை மணந்த பிறகு, ஸ்வப்னா மெதுவாக சினிமாவுக்கு விடை கொடுத்தார், ஆனால் கலையுடனான தனது தொடர்பைத் துண்டிக்கவில்லை. அவர்கள் சங்கினி என்டர்டெயின்மென்ட் என்ற நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தை நிறுவினர். அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின்படி, சங்கினி என்டர்டெயின்மென்ட் “உலகெங்கிலும் உள்ள இந்திய சினிமா ஆர்வலர்களுக்குப் பரந்த அளவில் உயர்தரமான, தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் நாடக நிகழ்ச்சிகளை வழங்க நோக்கம் கொண்டுள்ளது. ஸ்வப்னா திரையுலகை விட்டு விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது தைரியமான பாத்திரங்களுக்காகவும் மற்றும் அவர் வழங்கிய நடிப்புக்காகவும் அவர் இன்றும் போற்றப்படுகிறார்.
