சினிமா
ட்ரெண்டிங் பாடலுக்கு தாறுமாறாக நடனமாடிய ரவீனா… அடேங்கப்பா.!! வைரலான வீடியோ இதோ.!
ட்ரெண்டிங் பாடலுக்கு தாறுமாறாக நடனமாடிய ரவீனா… அடேங்கப்பா.!! வைரலான வீடியோ இதோ.!
சின்னத்திரை உலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடம் பிடித்த நடிகை ரவீனா, சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு பாடல் வீடியோவால் பெரும் கவனம் பெற்றுள்ளார். “பூட்டி வைச்ச குதிரை ஒன்னு புட்டுக்கிச்சு மாமா…” என்ற பாடலுக்கு அவர் நடனமாடிய விதம், அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.இந்த வீடியோவில் ரவீனா, பாடலுக்கு ஏற்ற விதத்தில் அவர் காட்டிய எக்ஸ்பிரஷன் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது டிரெண்ட்டாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோ வெளியான உடனே, சமூக வலைத்தளங்களில் அதனைப் பார்த்த ரசிகர்கள், “ரவீனா வேற லெவல்.. Ultimate டான்ஸ்.!” போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர், ரவீனாவின் அழகையும் பாராட்டி வருகின்றனர். வைரலான வீடியோ இதோ.!
