Connect with us

இலங்கை

தொழில்முனைவோர் சர்வஜன அறக்கட்டளை ஸ்தாபிப்பு!

Published

on

Loading

தொழில்முனைவோர் சர்வஜன அறக்கட்டளை ஸ்தாபிப்பு!

இலங்கையில் தொழில்முனைவோர் அரசை நிறுவி, மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் சர்வஜன அறக்கட்டளை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இதற்கான நிகழ்வு அண்மையில் கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா விருந்தகத்தில் நடைபெற்றது. 

சர்வஜன அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர், நாடாளுமன்ற  உறுப்பினர் மற்றும் தொழில்முனைவோரான திலித் ஜயவீர இந்த நிகழ்வில் பங்கேற்றார்.  இதன்போது இந்திய உயர் ஸ்தானிகர், சீனாவின் துணைத் தூதர், இந்தோனேசியாவின் உயர் ஸ்தானிகர், மாலைத்தீவு தூதுவர் உட்பட கனடா, ஜப்பான், ரஷ்யா, தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகளும், உள்நாட்டுத் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். 

Advertisement

அடிமட்ட மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஒரு சமூக இயக்கமாக சர்வஜன அறக்கட்டளை செயற்படுகின்றது. இலாப நோக்கமற்ற அறக்கட்டளையாக நிறுவப்பட்டுள்ள இதன் முதன்மையான நோக்கம், நாட்டில் தொழில்முனைவோர் திறமை கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களுக்குத் துணை நிற்பதாகும். 

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சிறு தொழில்களைத் தொடங்குவதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குதல், வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் மனநிலையைப் படிப்படியாக மாற்றி, அவர்களின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்தல், ஏழைகளின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகிய முக்கிய சமூகக் குறிகாட்டிகளை மேம்படுத்துதல் என்பனவற்றிற்கு பிரதானமாக பங்களிக்கவுள்ளது. இவ்வாறு, சர்வஜன அறக்கட்டளையானது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பை மறுசீரமைத்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் மகிழ்ச்சியான தேசத்தையும் உருவாக்க அடித்தளமிட்டுள்ளது. 

திலித் ஜயவீரவின் தலைமையின் கீழ், இந்த அறக்கட்டளை இலங்கையின் தொழில்முனைவோர் திறனைத் வளர்த்து, நம் நாட்டிற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன