பொழுதுபோக்கு
புதிய கார், கோடிகள், கிரீடம்… 100 நாட்களில் பிக் பாஸ் மலையாளம் சாம்பியன் சம்பாதித்தது என்ன?
புதிய கார், கோடிகள், கிரீடம்… 100 நாட்களில் பிக் பாஸ் மலையாளம் சாம்பியன் சம்பாதித்தது என்ன?
100 நாள் யுத்தம்… அனல் பறந்த சண்டைகள்… பி.ஆர் (PR) சர்ச்சைகள்… அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பிக் பாஸ் மலையாளம் சீசன் 7-ன் பிரம்மாண்ட கோப்பையைத் தட்டிச் சென்றார் நடிகை அனுமோல். கடும் போட்டி மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அனுமோல் மகுடம் சூட, ‘சாமானியராக’ (Commoner) களமிறங்கி கடைசி வரை போராடிய அனீஷ், 2-ம் இடத்தைப் (Runner-up) பிடித்து மக்களின் மனங்களை வென்றார். ஷானவாஸ் 3-ம் இடத்தைப் பிடித்தார்.சரி, 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக அனுமோல் வென்றது என்னென்ன? அவர் கல்லா கட்டிய மொத்த பரிசு மதிப்பின் விவரம் என்ன என்று பார்க்கலாம்.1. சம்பளமே ரூ.65 லட்சம்பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கவே அனுமோலுக்குக் கிடைத்த சம்பளம், பரிசுத் தொகையை விட அதிகம் என்பதுதான் ஆச்சரியமான ஹைலைட். ஆம். ஒரு நாளைக்கு ரூ.65,000 வீதம், 100 நாட்களுக்கு சுமார் 65 லட்சம் ரூபாயை அனுமோல் சம்பளமாக மட்டும் பெற்றுள்ளார்.2. ரொக்கப் பரிசு ரூ.42.55 லட்சம்வெற்றியாளருக்கான பரிசுத் தொகை ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘பிக் பேங்க் வீக்’ டாஸ்க்குகளில் மற்ற போட்டியாளர்கள் வென்ற தொகையைக் கழித்த பிறகு, அனுமோலின் கைகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.42.55 லட்சம் கிடைத்தது. (இந்தப் பரிசுக்கு 30% வரி பிடித்தம் செய்யப்படும்).3. பம்பர் பரிசு: புத்தம் புதிய கார்கோப்பை, சம்பளம், பரிசுப் பணம் மட்டுமா? இல்லை! வெற்றியாளருக்கான சர்ப்ரைஸ் பரிசாக, பளபளக்கும் ‘மாருதி விக்டோரியஸ்’ (Maruti Victorious) காரையும் அனுமோல் வென்றார். இதன் மதிப்பு தோராயமாக ரூ.12 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.மொத்த மதிப்பு: 1 கோடியைத் தாண்டியதுஆக மொத்தம், சம்பளம் (ரூ.65 லட்சம்), ரொக்கப் பரிசு (ரூ.42.55 லட்சம்), மற்றும் புத்தம் புதிய கார் என அனைத்தையும் சேர்த்து, பிக் பாஸ் சீசன் 7-ல் இருந்து அனுமோல் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளுடன் கெத்தாக வெளியேறியுள்ளார்.
