சினிமா
போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன்.. பாடி ஷேமிங் பிரச்சனை குறித்து கௌரி கிஷன் ஆவேசம்!
போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன்.. பாடி ஷேமிங் பிரச்சனை குறித்து கௌரி கிஷன் ஆவேசம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.கடைசியாக ‘சுழல் 2’ என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து Others என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசும்போது யூடியூபர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடும் கோபமாகி வாக்குவாதம் செய்தார் கௌரி.அதாவது, ஹீரோவிடம் செய்தியாளர் ‘ஹீரோயினை தூக்குனீங்களே அவங்க எடை எவ்வளவு’ என கேள்வி கேட்டிருக்கிறார்.இது பெரிய சர்ச்சை ஆன நிலையில், நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கேட்டார்.இந்நிலையில், இந்த மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன் என்று பதில் தெரிவித்துள்ளார் கௌரி.
