இலங்கை
யாழ்ப்பாணத்தில் இரவில் அரங்கேறிய சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி ; ஐவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் இரவில் அரங்கேறிய சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி ; ஐவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் (9) குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது.
இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர்.
குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்2துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்நிலையில் இரவில் அரங்கேறிய குழு மோதலால் குப்பிளான் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
