உலகம்
வரலாற்றில் நீண்ட முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகும் அமெரிக்கா!
வரலாற்றில் நீண்ட முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகும் அமெரிக்கா!
வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட்டர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க செனட் தேவையான நிதி சட்டமூலங்களை நிறைவேற்றத் தவறியதால், 40 நாள் கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கு செனட்டர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வாக்களிக்கத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால், அமெரிக்கா முழுவதும் அரசாங்க சேவைகள் முழுமையாக மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல தடைகள் இருப்பதாகவும், ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட எவ்வளவு காலம் ஆகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கரூவூலத் துறை முடக்கத்தால் பல தொழிலாளர்கள் ஊதியம் இன்றி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 1400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பல விமானங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் உதவி திட்டங்களை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
