Connect with us

இலங்கை

A/L பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்!

Published

on

Loading

A/L பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்!

  இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்,

“இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானது. அதேபோல், நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது.

இந்நிலையில் பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.

Advertisement

மாணவர்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், உரிய கால அட்டவணையைப் பரிசோதித்து, பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே குறித்த பரீட்சை நிலையத்திற்குச் செல்லுங்கள்.

மேலும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருங்கள். மண்டபங்களுக்குள் பிரவேசிப்பதற்கான பரீட்சை அனுமதிப் பத்திரத்தை எடுத்துச் செல்லுங்கள். எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன