Connect with us

சினிமா

53 வயதில் பத்ம பூஷன் விருது வென்ற அஜித்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு, சொந்தமா பிரைவேட் ஜெட்டும் இருக்காமே!

Published

on

Loading

53 வயதில் பத்ம பூஷன் விருது வென்ற அஜித்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு, சொந்தமா பிரைவேட் ஜெட்டும் இருக்காமே!

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டு இருப்பதுதான் நேற்றிலிருந்து சமூக வலைத்தளத்தில் பெரிய பேசு பொருளாக இருக்கிறது.

அஜித்குமார் பற்றி பொதுவாக பொதுவெளியில் எந்த விஷயமும் வெளிவராது. தன்னுடைய பிரைவசியில் அதிக கவனம் கொண்டவர்.

Advertisement

ஆனால் கார் ரேஸ் போட்டியில் மீண்டும் களமிறங்கிய பிறகு அஜித் நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார்.

இந்த வயதில் சட்டென உடல் எடையை அவர் குறைத்தது, தன்னுடைய பேஷன் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை தான் காட்டி இருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் காதல் மன்னனாக இருந்து அதன் பின்னர் அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாறிய அஜித்குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

அஜித்துக்கு கிட்டத்தட்ட 350 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி அது ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக பெறுகிறார்.

சென்னையில் அவருக்கு ஒரு பெரிய பிரம்மாண்ட பங்களா இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவரிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளும் இருக்கின்றன.

34 கோடி மதிப்பிலான லம்போகினி காரும் இதில் அடங்கும். 25 கோடியில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்.

Advertisement

அது மட்டும் இல்லாமல் நெஸ்கப்பே, ஏசியன் பெயிண்ட் போன்ற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

சென்னையில் பிரபலமான உணவகம் ஒன்றில் பங்குதாரராகவும் இருக்கிறார். அஜித்திடம் இருக்கும் ஒட்டுமொத்த பைக் மற்றும் கார்களின் மதிப்பு மட்டும் 36 கோடி.

Porsche GT3 RS என்னும் காரின் மதிப்பு 3.51 கோடியாகும்.Ferrari SF90 என்ற காரை ஒன்பது கோடிக்கு வாங்கி இருக்கிறார். ஒன்றரை கோடி மதிப்பில் BMW 740Li என்ற காரை வாங்கி இருக்கிறார்.

Advertisement

அஜித்திடம் இருக்கும் Mercedes-Benz 350 GLS என்ற காரின் மதிப்பு 1.35 கோடி ஆகும்.BMW K 1300 S, Kawasaki Ninja ZX-145, BMW S 1000 RR, Aprilia Caponord 1200 என்ற பைக்குகளையும் வைத்திருக்கிறார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன