வணிகம்
ராயல் என்பீல்டு வாங்க சரியான நேரம்… ஜி.எஸ்.டி. குறைப்பால் ரூ.22,000 வரை குறைந்த 350சிசி மாடல்கள்!
ராயல் என்பீல்டு வாங்க சரியான நேரம்… ஜி.எஸ்.டி. குறைப்பால் ரூ.22,000 வரை குறைந்த 350சிசி மாடல்கள்!
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைத்து, இழப்பீட்டு வரியை (compensation cess) நீக்கியதன் விளைவாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தனது 350சிசி பைக்குகளின் விலையை ரூ.22,000 வரை குறைத்துள்ளது. அதே சமயம், 350 சிசி-க்கு மேல் திறன் கொண்ட பைக் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த புதிய விலைப்பட்டியல் செப்.22 முதல் அமலுக்கு வரும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.350சிசி மாடல்களின் புதிய விலைகள்இந்தியாவில் உள்ள அனைத்து இருசக்கர வாகனங்களும் இதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி மற்றும் 3% இழப்பீட்டு வரி என மொத்தம் 31% வரி செலுத்த வேண்டியிருந்தது. புதிய வரிவிதிப்பு மாற்றத்தின்படி, 350சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதும். இந்த வரி குறைப்பால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களான ஹண்டர் 350, புல்லட் 350, கிளாசிக் 350, மற்றும் மீட்டியோர் 350 ஆகியவற்றின் விலைகள் ரூ.12,000 முதல் ரூ.19,000 வரை குறைந்துள்ளன. ஹண்டர் 350-இன் பேஸ் ரெட்ரோ மாடல் ரூ.1.38 லட்சம் விலையிலும், கிளாசிக் 350-இன் கோன் கிளாசிக் மாடல் ரூ.2.20 லட்சம் விலையிலும் தொடங்குகிறது.450சிசி மற்றும் 650சிசி மாடல்களின் புதிய விலைகள்350சிசி-க்கு மேல் திறன் கொண்ட பைக்குகளுக்கு தற்போது 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது முந்தைய 31% வரியை விட அதிகம். இந்த வரி உயர்வால், ஸ்க்ராம் 440, ஹிமாலயன் 450, இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650, ஷாட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 போன்ற மாடல்களின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சூப்பர் மீட்டியோர் மாடலின் விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.
