Connect with us

இந்தியா

மீண்டும் தொடங்கிய வர்த்தக பேச்சுவார்த்தை: கொஞ்ச நேரத்திலேயே மோடிக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன டிரம்ப்

Published

on

PM Modi Trump

Loading

மீண்டும் தொடங்கிய வர்த்தக பேச்சுவார்த்தை: கொஞ்ச நேரத்திலேயே மோடிக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன டிரம்ப்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே இரு நாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மிகவும் நேர்மறையாக” இருந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் காரணமாக, இந்தியா மீதான வரியை டிரம்ப் 50 சதவீதமாக ஆக உயர்த்தினார். இதனால் இரு தலைவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், அந்த விரிசலுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் பேச்சுவார்த்தையாக இந்த பிறந்த வாழ்த்து அமைந்துள்ளது. முக்கியமாக, மோடியும் டிரம்பும் சமூக வலைத்தளங்களில் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்துப் பேசியுள்ளனர்.இந்தியா-அமெரிக்கப் பங்கு உறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல தான்“முழுமையாக உறுதியுடன் உள்ளதாக மோடி கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில். என் நண்பர், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு இனிமையான தொலைப்பேசி உரையாடல் நடந்தது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்! அவர் மகத்தான பணியைச் செய்து வருகிறார். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, என் நண்பர், அதிபர் டிரம்ப், என் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நீங்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. உங்களைப்போலவே, நானும் இந்தியா-அமெரிக்காவின் விரிவான மற்றும் உலகளாவிய பங்கு உறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் முழுமையாக உறுதியுடன் இருக்கிறேன். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.சமீபத்தில், அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும், வாஷிங்டன் டி.சி.யில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் டிரம்ப் நடத்திய சந்திப்புகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார். கடந்த ஜூன் 17-ம் தேதிக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். அப்போது மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தாம் ஒரு போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறிய கூற்றுகளை மோடி மறுத்துவிட்டார்.இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதற்கான எந்தவொரு விவாதமும் எந்தவொரு மட்டத்திலும் நடக்கவில்லை என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி அப்போது தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே “சிறப்பு உறவு” உள்ளது, “கவலைப்பட ஒன்றுமில்லை” என்று டிரம்ப் செப்டம்பர் 6-ம் தேதி கூறியபோது, உறவுகளில் ஒரு திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முதன்முதலில் அறிகுறிகள் தோன்றின.சில மணிநேரங்களுக்குப் பிறகு, “அதிபர் டிரம்ப்பின் உணர்வுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டை தாம் ஆழமாக பாராட்டுகிறேன், முழுமையாக” அதைத் திரும்ப அளிக்கிறேன் என்று மோடி பதிலளித்தார். அதன்பிறகு, செப்டம்பர் 10-ம் தேதி, வர்த்தக பதட்டங்கள் தணியும் வாய்ப்பைச் சுட்டிக்காட்டி, இந்தியா மற்றும் அமெரிக்கா “வர்த்தகத் தடைகளை எதிர்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன என்றும், இந்த  பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் டிரம்ப் கூறினார்.அதற்கு மோடி, இரு நாடுகளும் இயல்பான பங்காளிகள் என்றும், வளமான, பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம்” என்றும் பதிலளித்தார். மிக நல்ல நண்பர் மோடியுடன் வரவிருக்கும் வாரங்களில் பேச ஆவலுடன் இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார், இது இரு தலைவர்களுக்கும் இடையே ஒரு தொலைப்பேசி உரையாடல் நடக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கு மோடி, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்கா பங்கு உறவின் “வரம்பற்ற சாத்தியக்கூறுகளை”த் திறக்க வழி வகுக்கும் என்று பதிலளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன