Connect with us

விளையாட்டு

ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்… கோவையில் செப்.28-ல் மாரத்தான் தொடக்கம்

Published

on

Coimbatore Run for Little Hearts Marathon Third Edition September 28 Tamil News

Loading

ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்… கோவையில் செப்.28-ல் மாரத்தான் தொடக்கம்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை வளாகத்தில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் எனும் மாரத்தான் போட்டியில், மூன்றாம் பதிப்புக்கான டி-ஷர்ட் மற்றும் மெடல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுச்சாமி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார், குழந்தைகள் இருதய மருத்துவர் கல்யாணசுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மருத்துவர் அஜிதா, குழந்தைகள் இருதய மருத்துவர் சன்ச்சிதா ஹரிணி ஆகியோர் மாரத்தான் போட்டிக்கான டிஷர்ட்  மற்றும் மெடல்களை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் அஜிதா  கூறியதாவது:-  இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் வரும், 28 ஆம் தேதி ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு இதய குறைபாடுகளை முன்கூட்டியே அறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த முடியும். புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வை பொதுமக்கள் பெற வேண்டும் என்பதற்காக இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கோவை மணி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டிகள், மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளது. ஒன்று முதல் மூன்று கிலோ மீட்டர் தூர ஓட்டம், 5 கிலோ மீட்டர் தூர ஓட்டம், 10 கிலோமீட்டர் தூர ஓட்டம், என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன