சினிமா
புஷ்பா 2 படத்தில் தளபதி புகழை தெறிக்கவிட்ட கர்நாடக பேன்ஸ்! வெறித்தனமான சம்பவம்

புஷ்பா 2 படத்தில் தளபதி புகழை தெறிக்கவிட்ட கர்நாடக பேன்ஸ்! வெறித்தனமான சம்பவம்
தென்னிந்திய சினிமாவில் இன்றைய தினம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்த படத்தை அல்லு அர்ஜுனின் தெலுங்கு ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றார்கள்.இந்த நிலையில், அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஷோவில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜயின் பெரிய அளவிலான புகைப்படத்தை திரைக்கு முன்பாக காண்பித்து கர்நாடக ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.d_i_aதமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ஏனைய மொழிகளிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அதனை உறுதி செய்யும் வரை கையிலேயே இன்றைய புஷ்பா படத்தின் திரையரங்குகளில் விஜயின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்கள்.இளைய தளபதி விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுமையாக பயணிக்க இருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.அது மட்டும் இல்லாமல் விஜய் ஒரு படத்திற்கு 200 தொடக்கம் 250 கோடி வரை சம்பளமாக பெறுகின்றார். இறுதியாக நடிக்க உள்ள தனது 69 ஆவது படத்திற்கும் 275 கோடி சம்பளம் விஜய்க்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய் தனக்கு இருக்கும் மார்க்கெட்டை விட்டு விட்டு அரசியலில் நுழைய உள்ளது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக காணப்படுகின்றது. அவர் மக்கள் பணிக்காக தனது கோடிக்கணக்கான சம்பளத்தையும் விட்டு வருவது தொடர்பில் பிரபலங்கள் பலரும் பேட்டி கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.