இந்தியா
புதுச்சேரி சபாநாயகருடன் கடும் விவாதம்… குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட தி.மு.க, காங்., உறுப்பினர்கள்
புதுச்சேரி சபாநாயகருடன் கடும் விவாதம்… குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட தி.மு.க, காங்., உறுப்பினர்கள்
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்கூட்டத்தொடர் மார்ச் ஒத்திவைக்கப்பட்டது.சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசுதீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும். மசோதா தாக்கல் அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடியது. புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6 வது பட்ஜெட் கூட்டத்தொடர் மார் 10-ம் தேதி துவங்கி மார்ச் 27-ம் தேதி முடிந்தது.6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதியின் கீழ் இன்று பேரவை கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை தொடங்கினார் தொடர்ந்து இறந்த தலைவர்களுக்கு இறங்கல் தீர்மானமும் இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானங்களை சபாநாயகர் வாசித்துக் கொண்டிருந்தார்.அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா,புதுச்சேரி மக்களுக்கு அறிவிக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படவில்லை, மூன்று மாதமாக ரேஷன் அரிசி வழங்கப்படவில்லை,சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை, குடிநீரால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள் இதனை பற்றி பேசுவதற்கு சட்டசபையை குறைந்தது ஐந்து நாட்களாவது நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதனை சபாநாயகர் செல்வம் ஏற்க மறுத்த போது சபாநாயகர் உடன் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் கடுமையான அமளி நிலவியது. இதனை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றுங்கள் என்று சபாநாயகர் செல்வம் உத்தரவிட ,சபை காவலர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். தொடர்ந்து சட்டசபை மைய மண்டபம் அருகே அமர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி அரசை கண்டித்தும் முதலமைச்சரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறும்போது…இதுவரை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் இது போன்ற ஜனநாயக விரோத செயல் நடந்தது இல்லை, ஆனால் சபாநாயகர் செல்வம் ஜனநாயகத்தை மீறி செயல்படுகிறார் அவருக்கு அளித்த மேலிட உத்தரவின் பேரில் அவர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பேட்டி: சிவா எதிர்க்கட்சித் தலைவர்பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
