இந்தியா
Villupuram Flood: ரூ.2000 வெள்ள நிவாரணம் தொகை” – ரேஷன் கடைகளில் டோக்கன் எப்போது பெறலாம்… அரசு கொடுத்த அப்டேட்…

Villupuram Flood: ரூ.2000 வெள்ள நிவாரணம் தொகை” – ரேஷன் கடைகளில் டோக்கன் எப்போது பெறலாம்… அரசு கொடுத்த அப்டேட்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வடமாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், விளை நிலங்கள் நாசமாகியுள்ளது. மேலும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ 2000 வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 2000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் (டிசம்பர்.5) ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.