Connect with us

தொழில்நுட்பம்

டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொடர்ச்சியாக சிக்கும் இளைஞர்கள்… தப்பிப்பது எப்படி?

Published

on

டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொடர்ச்சியாக சிக்கும் இளைஞர்கள்... தப்பிப்பது எப்படி?

Loading

டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொடர்ச்சியாக சிக்கும் இளைஞர்கள்… தப்பிப்பது எப்படி?

Advertisement

சமீபத்தில் 25 வயதான ஐஐடி பாம்பே மாணவர் ஒருவரிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அதிகாரிகள் போல் மோசடி செய்து ரூ.7.28 லட்சம் வசூலித்துள்ளனர். இன்ஜினியரிங் மாணவரான இவருக்கு ஜூலை மாதம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் மொபைல் எண்ணுக்கு எதிராக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் சொல்வதற்கு இணங்கவில்லை என்றால், “டிஜிட்டல் கைது” செய்துவிடுவோம் என்று கூறி அந்த மாணவரை இன்னும் அதிகமாக அச்சுறுத்தியுள்ளனர்.

இதில் பயந்துபோன மாணவர், மோசடியாளர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7.28 லட்சத்தை அனுப்பியுள்ளார். இந்தக் குற்றத்திலிருந்து அவரது பெயரை அழிக்கவும் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்கவும் பணம் செலுத்துவது அவசியம் என்று மோசடி செய்தவர்கள் கூறியுள்ளனர். இது ஏதோ ஒருவருக்கு மட்டும் நடந்த சம்பவம் அல்ல.

கடந்த மாதங்களில், இந்தியா முழுவதும் உள்ள பல நபர்கள் இதே போன்ற மோசடிகளால் குறிப்பிடத்தக்க தொகையை இழந்துள்ளனர். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். நிதி மோசடி அல்லது பணமோசடி போன்ற குற்றங்களுக்காக விசாரணையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மோசடியாளர்கள் நம்ப வைக்கிறார்கள்.

Advertisement

போலியான ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பேசும் இந்த சைபர் குற்றவாளிகள், கைது நடவடிக்கை அல்லது சட்டப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அபராதம் செலுத்துவது மட்டுமே ஒரே வழி என்று பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்கின்றனர். இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் நன்கு படித்த தனிநபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளை நன்கு அறிந்திருக்காத மூத்த குடிமக்கள் தான் பெருவாரியாக உள்ளனர்.

இந்த மோசடிகள் மிகவும் நவீனமாக மாறி வருவதால், விழிப்புடன் இருப்பது முக்கியம். இந்த மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில முக்கியமான டிப்ஸ் இதோ:

Advertisement

அரசாங்க நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஒருவரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வந்தால், பீதி அடைய வேண்டாம். அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் நேரடியாக ஏஜென்சியைத் தொடர்புகொண்டு நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.

வங்கிக் கணக்கு எண்கள், ஓடிபி எண்கள் அல்லது ஆதார் தகவல் போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது சரிபார்க்கப்படாத சேனல்கள் மூலமாகவோ ஒருபோதும் வெளியிட வேண்டாம். சட்டப்பூர்வ ஏஜென்சிகள் அத்தகைய விவரங்களை ஒருபோதும் கேட்காது.

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பயத்தையும் அவசரத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், நிலைமையை தர்க்கரீதியாக மதிப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

Advertisement

நீங்கள் ஒரு மோசடியை சந்தேகித்தால், அதன் தொடர்புகளைப் பதிவுசெய்து உங்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரளிக்கவும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன