திரை விமர்சனம்
தூக்குதூரை – திரை விமர்சனம்

தூக்குதூரை – திரை விமர்சனம்
[புதியவன்]
கைலாசபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்தின் பண்ணையார் மாரிமுத்து. அவரது மகள் இனியா. அந்த ஊரை காப்பாற்றிய ஒரு மன்னனின் கிரீடத்தை பண்ணையார் குடும்பம் பாதுகாத்து வருகிறது. ஆண்டு தோறும் கோயில் திருவிழாவில் அந்த கிரீடத்தை சாமி முன் வைத்து வழிபடுவது சம்பிரதாயம். ஒரு திருவிழாவிற்கு சினிமா படம் காட்ட வந்த யோகிபாபுவை காதலித்து அவருடன் வீட்டை விட்டு ஓடும்போது அந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார் இனியா. அப்போது ஊர் மக்கள் துரத்த கிரீடத்தை ஒரு பாழும் கிணற்றுக்குள் போடுகிறார். ஊர்காரர்கள் யோகி பாபுவை அதே கிணற்றுக்குள் தள்ளி தீ வைத்து கொல்கிறார்கள். அதன் பிறகு பேயாக மாறும் யோகி பாபு, அந்த ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார். 20 வருடங்களுக்கு பிறகு அந்த கிரீடத்தை திருட மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன் உள்ளிட்ட திருட்டு கோஷ்டி வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது படம்.
பழங்கால கிரீடம், அதை பாதுகாக்கும் பேய், அதை திருட வரும் ஒரு கூட்டம் என பழைய பாணியிலேயே ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் டேனியல் மஞ்சுநாத். காட்சிகளிலும் புதுமை இல்லை. யோகி பாபு வரும் காட்சிகள் மட்டும் கலகலப்பாக இருக்கிறது. திருடர்களின் காமெடி ரசிக்கும்படி இல்லை. லாஜிக் தேவைப்படாத கதையில் சகட்டுமேனிக்கு காமெடி வைத்து சிரிக்க வைக்க தவறியிருக்கிறார்கள். சென்ட்ராயன் திடீரென மாரிமுத்துவை அப்பா என்பதெல்லாம் சற்றும் பொருந்தவில்லை. கே.எஸ்.மனோஜின் பின்னணி இசையும், ரவிவர்மாவின் ஒளிப்பதிவும் தூக்குதுரைக்கு உதவி இருக்கிறது. [எ]