தொழில்நுட்பம்
சாட்ஜிபிடி சொன்ன நம்பர்.. ரூ.1.32 கோடி லாட்டரி வென்ற அமெரிக்க பெண்; அடுத்த நடந்த ட்விஸ்ட்!
சாட்ஜிபிடி சொன்ன நம்பர்.. ரூ.1.32 கோடி லாட்டரி வென்ற அமெரிக்க பெண்; அடுத்த நடந்த ட்விஸ்ட்!
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில், 50000 டாலர் (சுமார் ரூ.44 லட்சம்) பரிசுத் தொகையை வென்றார். ஆனால், அவர் கூடுதலாகச் செலவழித்த 1 டாலர், அவரது பரிசை 3 மடங்காக உயர்த்தி, 1,50,000 டாலராக (சுமார் ரூ.1.32 கோடி) மாற்றியது.கேரி இந்தப் பரிசுத் தொகையை வென்றது சாதாரணமான முறையில் இல்லை. அவர் லாட்டரி டிக்கெட் வாங்கும் முன், சாட்ஜிபிடி-5 என்ற ஏ.ஐ. யிடம் “எனக்கு சில அதிர்ஷ்ட எண்களைக் கொடு” என்று கேட்டுள்ளார். சாட்ஜிபிடி கொடுத்த எண்களைக் கொண்டு லாட்டரி வாங்கி உள்ளார். 2 நாட்களுக்குப் பிறகு, தனது போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். பரிசு வென்றதை அறிந்து, முதலில் இது ஒரு மோசடி என நினைத்துள்ளார். ஆனால், சாட்ஜிபிடி கொடுத்த எண்கள்தான் தனக்கு இவ்வளவு பெரிய தொகையை வென்று தந்துள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளார்.பெரும்பாலானோர் லாட்டரி வென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையோ அல்லது நிதிப் பாதுகாப்பிற்காக பணத்தைச் சேமிப்பதையோதான் நினைப்பார்கள். ஆனால், கேரி எட்வர்ட்ஸ் முற்றிலும் வேறுபட்டவர். “இந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்ததுமே, இதை என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள், அதனால் நான் பெற்றதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இது மற்றவர்களும், அவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும்போது, அதை மற்றவர்களுக்குப் பயன்படுத்த உதாரணமாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் கேரி.தான் வென்ற 1.50 லட்சம் டாலர் முழுவதையும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். Association for Frontotemporal Degeneration (AFTD), தனது கணவரின் மரணத்திற்கு காரணமான நோய்க்கான ஆராய்ச்சிக்கு நிதி திரட்டும் இந்த அமைப்புக்கு தனது முதல் நன்கொடையை அளித்துள்ளார்.Shalom Farms, பசிப்பிணிக்கு எதிராகப் போராடும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு இரண்டாவது நன்கொடையை அளித்துள்ளார். Navy-Marine Corps Relief Society, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் இந்த அமைப்புக்கு 3-வது நன்கொடையை அளித்துள்ளார். கேரியின் இந்த முடிவு, லாட்டரி அதிர்ஷ்டம் என்பது தனிப்பட்ட ஆதாயத்திற்காக மட்டுமல்ல, சமூகத்திற்கு நன்மை செய்வதற்காகவும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு சிறந்த உதாரணம். சாட்ஜிபிடி மற்றும் அவரது தாராள குணம் ஆகியவை தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
