Connect with us

உலகம்

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் சந்தித்த டிரம்ப் – எலான் மஸ்க்!

Published

on

Loading

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் சந்தித்த டிரம்ப் – எலான் மஸ்க்!

நீண்ட நாட்களுக்குப் பின்னர், அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க் ஆகியோர் ஒன்றாகக் சந்தித்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசு சமீபத்தில் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் புதிய வரி திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இந்த வரிக் கொள்கையை “முட்டாள்தனமானது” என எலான் மஸ்க் கண்டித்த நிலையில், ட்ரம்ப் “மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார்; அவருடன் பேச முடியாது” எனக் கடுமையாக விமர்சித்தார். இதனால், சமூக ஊடகங்களில் இருவரும் ஒருவரையொருவர் சாடி வந்த சம்பவங்கள் பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தியது.

Advertisement

இந்த சம்பவத்தால் , இருவரின் நெருங்கிய உறவு முற்றாக முறிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்தனர். நிகழ்வின் போது இருவரும் சில நிமிடங்கள் நேரடியாக உரையாடியதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இதேவளை இருவரும் மீண்டும் நட்புடன் பேச தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன