வணிகம்
ரூ.5.52 லட்சத்தில் புதிய ஏஸ் கோல்ட்+ அதிக லாபம் தரும் டீசல் வேரியண்ட்!
ரூ.5.52 லட்சத்தில் புதிய ஏஸ் கோல்ட்+ அதிக லாபம் தரும் டீசல் வேரியண்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், அதன் ஏஸ் வரிசையில் மிகவும் குறைந்த விலையிலான டீசல் வேரியண்ட்டான ஏஸ் கோல்ட்+-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.52 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஸ் கோல்ட்+ சிறந்த செயல்திறனையும், அதன் பிரிவில் குறைந்த மொத்த உரிமையாளர் செலவையும் (Total Cost of Ownership) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வாகனம், மேம்பட்ட Lean NOx Trap (LNT) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் டீசல் எக்ஸாஸ்ட் டுய்ட் (DEF) தேவையில்லை. இதன் மூலம், பராமரிப்பு மற்றும் இயங்கும் செலவு கணிசமாகக் குறைகின்றன. இந்த புதிய தொழில்நுட்பம், கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்குவதோடு மட்டுமல்லாமல், தொடர் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கிறது. இதனால் ஒவ்வொரு பயணத்திலும் வாடிக்கையாளர்கள் அதிகம் சம்பாதிக்க முடியும்.இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களின் துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர், பினாகி ஹல்தார், “கடந்த 2 தசாப்தங்களாக, டாடா ஏஸ் இந்தியா முழுவதும் கடைநிலை போக்குவரத்துத் தேவைகளை மாற்றியமைத்து, லட்சக்கணக்கான தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளது” என்று கூறினார்.“ஒவ்வொரு மேம்படுத்தலிலும், இது மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பல்துறை அம்சங்கள் மற்றும் பரந்த பயன்பாடுகளை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது. ஏஸ் கோல்ட்+ அறிமுகமானது, இந்த பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இது வணிகச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது, லாபத்தை அதிகரிக்கிறது, மேலும் இந்தியாவின் தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.22PS ஆற்றல், 55Nm டார்க் திறனை வழங்கும் டர்போசார்ஜ்டு டைகோர் (Dicor) என்ஜினுடன் ஏஸ் கோல்ட்+ நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 900 கிலோ பேலோட் கொள்ளளவு மற்றும் பல்வேறு ஏற்றும் தள அமைப்புகளுடன், இது பலவிதமான சரக்குத் தேவைகளுக்குத் தேவையான பல்துறைத் திறனையும் செயல்திறனையும் வழங்குகிறது.டாடா மோட்டார்ஸின் சிறிய வர்த்தக வாகனம் மற்றும் பிக்கப் போர்ட்ஃபோலியோ, அதாவது ஏஸ் ப்ரோ, ஏஸ், இன்ட்ரா மற்றும் யோதா ஆகியவை, 750 கிலோ முதல் 2 டன் வரையிலான பேலோடுக்கு ஏற்றவையாக உள்ளன. இவை டீசல், பெட்ரோல், சிஎன்ஜி, பை-ஃபியூல் மற்றும் எலெக்ட்ரிக் போன்ற பல எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இந்த விரிவான வாகன வரிசைக்கு ஆதரவாக, சம்பூர்ணா சேவா 2.0 என்ற விரிவான வாழ்நாள் ஆதரவுத் திட்டமும் உள்ளது. இது AMC பேக்கேஜ்கள், உண்மையான உதிரி பாகங்கள், மற்றும் 24×7 அவசரச் சாலை உதவி ஆகியவற்றை வழங்குகிறது.டாடா மோட்டார்ஸின் இந்தியா முழுவதும் உள்ள 2,500 சேவை மையங்கள் மற்றும் ஸ்டார் குரு எனப்படும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன், ஏஸ் கோல்ட்+ தொழில்முனைவோர் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் ஒரு சிறந்த ஊக்க சக்தியாக உள்ளது. டாடா ஏஸ் வரிசை பல ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது, இது நகரப் போக்குவரத்துக்கான சிறிய சரக்கு வாகனத் தேவைகளுக்கு சிறந்த தேர்வாகவும் இருந்து வருகிறது.
