Connect with us

இந்தியா

10 லாட்டரி டிக்கெட் வாங்கி 12 கோடி தட்டி சென்ற மனிதர்: என்னா ஒரு புத்திசாலித்தனம்!

Published

on

Loading

10 லாட்டரி டிக்கெட் வாங்கி 12 கோடி தட்டி சென்ற மனிதர்: என்னா ஒரு புத்திசாலித்தனம்!

கேரளா லாட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து அன்றைய தினமே அடுத்த பம்பர் லாட்டரியான பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 12 கோடி பரிசுத் தொகைக்கானது.

Advertisement

இதன் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டது. JC 325526 என்ற எண்ணுக்கு பரிசு விழுந்தது. முடிவு வெளியான ஒரு நாள் கழித்து கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜண்டை தொடர்பு கொண்ட தினேஷ்குமார் அந்த டிக்கெட் தன்னிடத்தில் இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து, அவரை வரவழைத்த லாட்டரி ஏஜண்ட் கேரள லாட்டரி துறைக்கு தகவலும் கொடுத்தார்.

தினேஷ் குமார் லாட்டரி சப் ஏஜண்ட் ஆவார். அந்த வகையில், கொல்லம் பஸ்ஸ்டாண்டிலுள்ள ஜெயக்குமார் லாட்டரி கடையில் 10 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில், ஒரு டிக்கெட்டுக்குதான் 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இது குறித்து , ஜெயக்குமார் கூறுகையில், இந்த முறை எனக்கு லாட்டரியில் பரிசு விழும் என்று எனது உள்மனம் சொன்னது. குலுக்கல் நடைபெறுவதற்கு முதல் நாள் கூட நமக்குதான் முதல் பரிசு விழும் என்று எனது மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் கூறியிருந்தேன். சொன்னபடிய நடந்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

தினேஷ்குமாருக்கு கழிவுகள் போக 6.18 கோடி கிடைக்கும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன