Connect with us

இந்தியா

‘இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்கும்’.. ரஷ்யப் படைகளை ‘காகிதப் புலி’யுடன் ஒப்பிட்டு டிரம்ப் அதிரடி

Published

on

Trump says Ukraine can

Loading

‘இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்கும்’.. ரஷ்யப் படைகளை ‘காகிதப் புலி’யுடன் ஒப்பிட்டு டிரம்ப் அதிரடி

உக்ரைன் போரில் ரஷ்யாவிடம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்கும் வலிமை உக்ரைனுக்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது, உக்ரைன் சில சலுகைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் முன்னர் விடுத்த அழைப்பிலிருந்து விலகி, தனது நிலைப்பாட்டை மாற்றியதைக் குறிக்கிறது.ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் உக்ரைன் தனது அசல் எல்லைகளை “போராடி வெல்ல” முடியும் என்று அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டார். “உண்மையான ராணுவ சக்தி ஒரு வாரத்திற்குள் வென்றிருக்க வேண்டிய போரில், ரஷ்யா 3.5 ஆண்டுகளாக குறிக்கோள் இல்லாமல் சண்டையிடுகிறது” என்று அவர் எழுதினார். இது ரஷ்யாவை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) போல தோற்றமளிக்கச் செய்துள்ளது என்றும் அவர் சாடினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமாஸ்கோ மீதான பொருளாதார அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். “மாஸ்கோ மற்றும் ரஷ்யா முழுவதும் உள்ள அனைத்து பெரிய நகரங்கள், மாவட்டங்களில் வாழும் மக்கள், இப்போரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் போது… உக்ரைனால் அதன் நாட்டை அசல் வடிவத்தில் மீட்டு எடுக்க முடியும், மேலும், யாருக்குத் தெரியும், ஒருவேளை அதையும் தாண்டி செல்லக்கூடும்,” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். அவர் முடிவாக, “எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் சேர்த்துக் கொண்டார்.இதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைச் சந்தித்தபோதும் டிரம்ப் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். “பிராந்தியத்தில் சமீபத்திய போர் தொடங்கிய 3.5 ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்கும் திறன் உக்ரைனுக்கு உள்ளது,” என்று அவர் கூறினார். உக்ரைனின் எதிர்த்துப் போராடும் திறன், ரஷ்யா ஒரு “காகிதப் புலி” என்பதை நிரூபிக்கக்கூடும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். “நான் அதை உணர்கிறேன். நான் உண்மையிலேயே அப்படி உணர்கிறேன். அவர்கள் தங்கள் நிலத்தை மீட்டெடுக்கட்டும்,” என்றும் அதிபர் டிரம்ப் மேலும் கூறினார்.அமெரிக்கா தொடர்ந்து நேட்டோவுக்கு ஆயுதங்களை வழங்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். “நேட்டோ அந்த ஆயுதங்களை வைத்து அவர்கள் விரும்பியதைச் செய்ய நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று அவர் எழுதினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன