சினிமா
ரவி மோகன் தோழி கெனிஷா சொன்ன அந்த விஷயம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
ரவி மோகன் தோழி கெனிஷா சொன்ன அந்த விஷயம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
பிரபல பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் கெனிஷா. தற்போது நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக வலம் வரும் கெனிஷா அவரின் தயாரிப்பு நிறுவனத்துடனும் பார்ட்னர் ஆக உள்ளார்.அவ்வப்போது இவர்கள் ஒன்றாக வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில், தற்போது அவரது வாழ்க்கை வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் கீழ் அவர் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” தாமதங்கள் எப்போதும் சிறந்த விஷயங்கள் வரவிருக்கின்றன என்பதை உணர்த்தும். ஒரு நாள் அப்பா என்னிடம், ‘குட்டிப் பொண்ணே, நீ ஒன்று வேண்டும் என்று நினைத்தால் அதை சம்பாதிக்க வேண்டும்.இந்த பார்பி மட்டுமல்ல, வாழ்க்கையில் எல்லாவற்றையும் நீயே சம்பாதிக்க வேண்டும். அதற்கு கடின உழைப்பு, பொறுமை, திறமை இருந்தால் போதும் என்று கூறியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
