Connect with us

பொழுதுபோக்கு

ஒரிஜினில் போட்டோ, ஏ.ஐ பண்ணல; சாய் பல்லவி புதிய புகைப்படங்கள்: வீடியோ மூலம் பதிலடி!

Published

on

Sai Pallavi

Loading

ஒரிஜினில் போட்டோ, ஏ.ஐ பண்ணல; சாய் பல்லவி புதிய புகைப்படங்கள்: வீடியோ மூலம் பதிலடி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவியின் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது ஏ.ஐ. புகைப்படம் அல்ல, ஒரிஜினல் என்று பதிவிட்டு, சாய் பல்லவி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் சாய் பல்லவி. தமிழில் கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்த இவர், தெலுங்கில், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நானி, நாக சைதன்யா உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வெற்றிகளை குவித்து வரும் சாய் பல்லவி, கார்க்கி என்ற படத்தில், சோலோ நாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதேபோல் ஷாயம் சிங்கராய் படத்தில், தேவதாசி கேரக்டரில் நடித்து அசத்திய சாய் பல்லவி, திரைப்படங்களில் க்ளாமர் காட்டாமல் ஹோம்லி லுக்கில் தான் நடித்து வருகிறார், இதனால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் பெரிய அளவில் இருக்கிறது. அதேபோல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் பல்லவி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார், இந்த புகைப்படங்களும், க்ளாமராக இருக்காமல் ஒருவகையாக ஹோம்லி லுக்கினால் தான் இருக்கும்.இதனிடையே கடந்த வாரம், சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் சாய் பல்லவி தனது தங்கையுடன் நீச்சல் உடையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாய் பல்லவி க்ளாமருக்கு மாறிவிட்டாரா என்று ஒரு தரப்பினரும், ஆடை அணிவது அவரின் சுதந்திரம், இதில் யாரும் தலையிட முடியாது என்று ஒரு தரப்பினரும் கருத்து கூறி வந்தனர். இதில் சாய்பல்லவிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வந்தது.A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)இதனிடையே தற்போது சாய் பல்லவி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்ளிப்புகள் இணைந்து இருக்கிறது. இதை பதிவிட்டுள்ள அவர், இது முழுக்க முழுக்க ஒரிஜினல் பதிவு. ஏ.ஐ பதிவுகள் அல்ல என்று பதிவிட்டுள்ளார். சாய் பல்லவி தங்கை வெளியிட்ட புகைப்படங்களை நெட்டிசன்கள் ஏ.ஐ. வைத்து மாற்றியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவரே இது ஏ.ஐ. இல்லை என்று குறிப்பிட்டு பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன