Connect with us

பொழுதுபோக்கு

கணவர் இறந்த துயரம், மேடையில் பாடி கதறி அழுத பி.சுசீலா: சிவாஜி படத்தின் இந்த பாட்டு அவ்ளோ சோகம்!

Published

on

susi

Loading

கணவர் இறந்த துயரம், மேடையில் பாடி கதறி அழுத பி.சுசீலா: சிவாஜி படத்தின் இந்த பாட்டு அவ்ளோ சோகம்!

தனது தேன் போன்ற இனிமையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாடகி பி.சுசீலா. இன்றும் அவர் பாடிய பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் ‘தென்னகத்தின் பாடகி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.70 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைத்துறை வாழ்க்கையில் ஆயிரகணக்கான பாடல்களை சுசீலா பாடியுள்ளார். அவரது பாடல்கள் தாயின் மடியில் படுத்து தாலாட்டு கேட்பது போல நம்மை தூங்க செய்திருக்கிறது. சோகம், மோகம், ஊக்கமூட்டுதல், பக்தி, பரவசம் என எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அவரது குரல் எல்லா பாடல்களுக்கும் பொருத்தமாக இருக்கும். எந்த ஒரு குறிப்பிட்ட உணர்வையும் அவரது குரல் மூலம் கடத்தும் பண்பு அவருக்கு உண்டு.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துளு, படாகா, சிங்களம் என 12 மொழிகளில் சுசீலா பல பாடல்கள் பாடியுள்ளார். 70- 80 காலங்களில் இசையமைப்பாளர் அனைவருக்கும் பிடித்த பாடகியாக இருந்துள்ளார்.இசையமைப்பாளர்கள் மட்டுமல்லாமல் நடிகை, நடிகர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்துள்ளார். ஒரு சில நடிகைகள் தனது படங்களுக்கு பி.சுசீலா தான் பாட வேண்டும் என்று கேட்டுள்ளார்களாம். இந்நிலையில், பாடகி பி. சுசீலா மேடையில் அழுத தருணம் குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசியுள்ளார்.அவர் பேசியதாவது, “ஒரு வெளிநாடு நிகழ்ச்சி ஒன்றிற்கு பாடகி சுசீலாவை புக் செய்துவிட்டு தேதி எல்லாம் தந்துவிட்டார்கள் சுசீலா. அப்போது அவர் கணவர் உயிரோடு இருந்தார். அவர் கணவர் இறந்த பின்னர் சுசீலா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்.நான் மிகவும் வற்புறுத்தி அவரை அழைத்து சென்றேன். அப்போது மக்கள் எல்லாம் ’உயர்ந்த மனிதன்’ படத்தில் உள்ள பாடலை பாடுமாறு ஆரவாரம் செய்தார்கள். அந்த பாடல் எனக்கு சுசீலாவிற்கு எல்லாம் ரொம்ப பிடித்த பாடல்.‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.. இன்று எந்தன் தலைவன் இல்லை’ என்று சொன்னதும் சுசீலாவால் பாட முடியவில்லை. எனக்கும் அதன் பின்புதான் ஏன் அந்த பாடலை பாட வைத்தோம் என்று மனதிற்கு ரொம்ப வேதனையாக இருந்தது.ஏனென்றால் அவர் கணவர் இறந்து மூன்று மாதத்தில் தான் நாங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். சில நேரத்தில் பாடலின் வரிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்ற அனுபவம் எனக்கு இருக்கிறது” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன