Connect with us

பொழுதுபோக்கு

40 வயதுக்கு மேல் தாய்மை: 8 பிரபலங்கள் யார் தெரியுமா?

Published

on

karina

Loading

40 வயதுக்கு மேல் தாய்மை: 8 பிரபலங்கள் யார் தெரியுமா?

குழந்தை பெறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பது போல் பாலிவுட் பிரபலங்கள் பலர் 40 வயதிற்கு மேல் குழந்தைகளை பெற்றுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.நடிகை கத்ரீனா கைஃப் – விக்கி கெளஷல் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தனது 42 வயதில் முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.நடிகை கத்ரீனா கைஃப் நிறைமாத வயிற்றுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.இதேபோன்று பாலிவுட்டில் பல பிரபலங்கள் 40 வயத்திற்கு மேல் தனது கர்ப்பத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, நடிகை கரீனா கபூர் தனது 2 -வது குழந்தையை 40 வயதில் பெற்றெடுத்தார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 2-வது ஆண் குழந்தையை பெற்றார். நடிகை நேஹா துபியா இவர் தனது  40-வது வயதில் 2-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.பிரபல நடிகை பிரித்தி ஜிந்தா வாடகை தாய் மூலம் ஜெய் மற்றும் கியா என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தனது 46 வயதில் அவர் இந்த இரட்டை குழந்தைகளை பெற்றார். நடிகை பிபாஷா பாசு தனது 43-வது வயதில்  தங்களுடைய மகள் தேவியை வரவேற்றனர்.திரைப்பட இயக்குநர், நடன இயக்குநரான பரா கான் தந்து 43-வது வயதில் சார்ஹ், அன்யா மற்றும் தீவாவை ஆகிய 3 குழந்தைகளுக்கு தாயானார். நடிகை தியா மிர்சா 40 வயதில் தனது மகன் அவ்யான் அசாத்துக்கு தாயானார்.அனிதா ஹசனந்தானி சுமார் 40 வயதில், தனது முதல் குழந்தையான ஆரவ்வை பெற்றார்.  இப்படி பாலிவுட் பிரபலங்கள் பலர் 40-க்கும் மேல் தங்களது குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன