சினிமா
இந்த அளவு வன்முறை, கொடுமை.. பொங்கிய நடிகை நிவேதா!
இந்த அளவு வன்முறை, கொடுமை.. பொங்கிய நடிகை நிவேதா!
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.அப்படத்திற்கு பின் இவர் நடித்த டிக் டிக் டிக், சங்கதமிழன், திமிரு புடிச்சவன் என தமிழில் தொடர்ந்து நடித்தவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்து வந்தார்.கடைசியாக 2023ம் ஆண்டு இவரது நடிப்பில் படம் வெளியானது, அதன்பின் சினிமா பக்கம் அதிகம் தலைக்காட்டவில்லை.இந்நிலையில், நிவேதா தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம்.இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை” என்று தெரிவித்துள்ளார்.
