Connect with us

பொழுதுபோக்கு

ரூ.500 சம்பள‌ பாக்கி, இன்னும் தராத பாரதிராஜா; 16 வயதினிலே பரட்டைக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Published

on

16 vayathinile

Loading

ரூ.500 சம்பள‌ பாக்கி, இன்னும் தராத பாரதிராஜா; 16 வயதினிலே பரட்டைக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இயக்குநர்பாரதிராஜா ’16 வயதினிலே’என்றபடத்தின்மூலம் 1977-ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில்அறிமுகமானர். இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று ஜாம்பவான்கள் இளம் வயதில் இணைந்து நடித்த இந்தப் படம், இன்றுவரை ஒரு கிளாசிக் படைப்பாகப் பேசப்படுகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பளப் பேச்சுவார்த்தை குறித்து இயக்குநர் பாரதிராஜா டூரிங்டாக்கீஸ்சினிமாயூடியூப்பக்கத்தில்அளித்தபேட்டியில்பகிர்ந்துள்ளார். சினிமா உலகில் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல்தான்இது. இந்தபடத்தில்கமல்ஹாசன் – சப்பாணிஎன்றகதாப்பாத்திரத்திலும்ஸ்ரீதேவி – மயில் என்றகதாப்பாத்திரத்திலும்ரஜினி – பரட்டைஎன்றகதாப்பாத்திரத்திலும்நடித்துஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தில் ‘பரட்டை’ என்ற கிராமத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய சூழலில், ரஜினிகாந்த் தனது சம்பளமாக ரூ.5,000 கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்ததால், ரஜினியிடம் அது ஒரு ‘ஆர்ட் பிலிம்’ (கலைப்படம்) என்று கூறி, அவரது சம்பளத்தை ரூ.3,000 எனக் குறைத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.ரஜினிகாந்துக்கு ரூ.3,000 சம்பளம் பேசப்பட்டாலும், இறுதிக் கணக்கில் அவருக்குக் கொடுக்கப்பட்டது ரூ.2,500 மட்டுமே. மீதமிருந்த ரூ.500 பாக்கியை இயக்குநர் பாரதிராஜா இன்னும் கொடுக்கவில்லை என்றார். இதைவிளையாட்டாகஅவ்வப்போதுரஜினிகாந்த்சுட்டிக்காட்டியும்பேசுவாராம். மீதி ஐநூறு ரூபாயை இன்னும் தரலையே என்று ரஜினி இப்போது பார்த்தாலும் என்னைக் கேட்டுக்கொண்டே இருப்பார்என்று கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பள விவரங்கள், தமிழ் சினிமாவில் ’16 வயதினிலே’ திரைப்படம் எப்பேர்ப்பட்ட சவால்களுக்கு மத்தியில், ஆனால் தரமான படைப்பாக உருவானது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இன்று சூப்பர் ஸ்டாராக உலகம் முழுவதும் அறியப்படும் ரஜினிகாந்த், தனது ஆரம்ப நாட்களில் வாங்கிய சம்பளம் குறித்த இந்தக் கதை, சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பகுதியாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன