Connect with us

பொழுதுபோக்கு

நடித்த ஒரே தமிழ் படத்தில் விஜய்க்கு ஜோடி, 10 வயது இளையவரை திருமணம் செய்த நடிகை; பல கோடிக்கு அதிபதி!

Published

on

priyanka chopra

Loading

நடித்த ஒரே தமிழ் படத்தில் விஜய்க்கு ஜோடி, 10 வயது இளையவரை திருமணம் செய்த நடிகை; பல கோடிக்கு அதிபதி!

பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளும், தென்னிந்தியத் திரையுலகில் (டோலிவுட், கோலிவுட்) ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா போன்றோரும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக இருந்தாலும், இவர்களை விட திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட ஒரு நடிகை தான் அதிக சம்பளம் பெறுகிறார்.சினிமா ரசிகர்களால் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கொண்டாடப்படுகிறார்கள். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என நீங்கள் தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் என்று நினைத்தால் அது தவறு.ஒரு திரைப்படத்திற்கு ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கும் இந்த நடிகையே, கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகைகளில் ஒருவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உலக அளவில் புகழ்பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல, முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ராதான்.பாலிவுட்டில் கதாநாயகிகளின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றிய பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஒரு படத்திற்கு $5 மில்லியன் (சுமார் ரூ. 40 கோடி) வரை சம்பளம் பெறுகிறார். இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது, ஒரு படத்திற்கு ரூ. 14 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக அதே அறிக்கை குறிப்பிடுகிறது.பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் எனப் பயணித்தாலும், அவரது சினிமாப் பயணத்தைத் தொடங்கியது தமிழ் சினிமாதான். அவர் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படமாகும்.அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ மாபெரும் வெற்றி பெற்றது. இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது. தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என பிரியங்கா சோப்ரா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன