இலங்கை
கொழும்பில் திடீர் பொலிஸ் சோதனை
கொழும்பில் திடீர் பொலிஸ் சோதனை
கொழும்பு மருதானை பகுதியில் இன்று (27) மாலை பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
மருதானையின் stroke place பகுதி உட்பட பல இடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விசேட சோதனையில் இராணுவமும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
