சினிமா
எல்லா சொந்தமும் நடிக்குது.. அப்பா இல்லனா இதான் நிலைமையா? இந்திரஜா கண்ணீர் பதிவு
எல்லா சொந்தமும் நடிக்குது.. அப்பா இல்லனா இதான் நிலைமையா? இந்திரஜா கண்ணீர் பதிவு
நடிகர் ரோபோ ஷங்கர் சமீபத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியாக காணப்பட்டது. இவருடைய இழப்பை தற்போது வரையில் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இவர் மாரி, புலி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சொட்ட சொட்ட நனையுது படத்திலும் நடித்திருந்தார். ரோபோ ஷங்கருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்தது. எனினும் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் அதிலிருந்து மீண்டார். பின்பு படங்களில் நடிக்கத் தொடங்கிய ரோபோ ஷங்கர் சமீபத்தில் கதாநாயகனாகவும் களமிறங்கி இருந்தார். புதிய படத்திற்கான சூட்டிங் ஒன்றிலேயே ரோபோ ஷங்கர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தன்னுடைய தந்தையின் உயிரிழப்பை தாங்க முடியாமல் தினமும் உருக்கமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு பார்ப்பவர்கள் சிந்திக்கச் செய்துள்ளது. அதில் அவர், தந்தை இல்லாத போது தான் தெரியும் உலகிலேயே எல்லாம் சொந்தமும் அவர் இருந்தால் தான் நிலைக்கும் இல்லை விட்டால் நடிக்கும் என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
