தொழில்நுட்பம்
7,000mAh பேட்டரி, 100W சார்ஜிங்… ஐக்யூ 15 போன் வேற லெவலா இருக்கப் போகுது!
7,000mAh பேட்டரி, 100W சார்ஜிங்… ஐக்யூ 15 போன் வேற லெவலா இருக்கப் போகுது!
ஐக்யூ நிறுவனம் தனது அடுத்த அதிரடி வெளியீட்டிற்குத் தயாராகிவிட்டது. புதிய ஃபிளாக்ஷிப் மாடல், குவால்காமின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) பிராசஸரில் இயங்கும் என்பதை அந்நிறுவனம் உறுதி செய்து உள்ளது. கேமிங்கிற்கான பிரத்யேக டிசைன் மற்றும் பவர்ஃபுல் அம்சங்களுடன் வரவுள்ள இந்த போன், அக்.2025-ல் உலகளவில் அறிமுகமாகி, விரைவில் இந்தியாவிலும் கால் பதிக்கிறது.ஐக்யூ வெளியிட்டுள்ள டீசர்களில் இந்தப் போன் பளிங்குக் கல்லைப் (marble) போன்ற அமைப்புடன் புதிய லிங்யூன் (Lingyun) வண்ணத்தில் வரலாம். கேமிங் டி.என்.ஏ, தட்டையான விளிம்புகள், மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் கேமர்களுக்குப் பிடித்த RGB லைட் ஸ்ட்ரிப் என இதன் வடிவமைப்பு, இது கேமிங் பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 6.8 இன்ச் LTPO AMOLED 2K டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. சூரிய வெளிச்சத்திலும் தெளிவான காட்சிக்காக, AR எதிர்ப்பு-கண்ணை கூசும் பூச்சும் இதில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன், வேகமான LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் இதில் இணைகிறது. இதில் 7000 mAh திறன் கொண்ட பேட்டரி, அதிரடியான 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் எனத் தெரிகிறது.சாதாரண ஸ்மார்ட்போனாக இல்லாமல், கேமிங்கை மேம்படுத்த Q3 கேமிங் சிப், மேம்பட்ட எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு (Satellite Connectivity) போன்ற பிரத்யேக அம்சங்களும் இதில் சேர்க்கப்பட உள்ளன. ஐக்யூ 15 ஆனது, பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் 50mp அமைப்பை கொண்டிருக்கும். இது மேம்பட்ட ஜூம் திறன்களை வழங்கும். மென்பொருள் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6-ல் இயங்கும்.உலகளவில் அக்டோபர் 2025 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் நவம்பர் 15 முதல் 25-க்குள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆரம்ப விலை ரூ.59,999-ஆக இருக்கலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. சக்திவாய்ந்த சிப்செட், பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் கேமிங் அம்சங்களுடன் iQOO 15, இந்த ஆண்டின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் சந்தையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
