இலங்கை
புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது ; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி
புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது ; ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி
வரவிருக்கும் பாதீட்டுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி கூறினார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் பாதீட்டுத் திட்டத்தில் எந்தவித புதிய வரிகளையும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை எனவும் எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
