விளையாட்டு
இந்தியா Vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி: பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி – ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய ஜெய்ஸ்வால்

இந்தியா Vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி: பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி – ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய ஜெய்ஸ்வால்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி அடிலேய்டில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 2nd Test: Yashasvi Jaiswal departs, IND 15/1 vs AUS in Adelaide இத்தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த நிலையில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன்பேரில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய முனைப்பில் ஆஸ்திரேலிய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த போட்டியில் விளையாடாத ரோகித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் இப்போட்டியில் இணைந்துள்ளனர். இதில் மூன்றாவதாக ரோகித் ஷர்மா பேட்டிங் செய்ய வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கவுள்ளனர். விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் 4 மற்றும் 5-வது பேட்ஸ்மேன்களாக விளையாடுவர்.இரு அணி வீரர்களின் விவரம்:இந்திய அணி: ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பன்ட், ரோகித் ஷர்மா (கே), நிதிஷ் ரெட்டி, அஷ்வின், ஹர்ஷித் ரானா, பும்ரா மற்றும் முகமது சிராஜ்ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் காஜா, நதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லப்ஸ்ஜாஞ், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹேட், மிட்சேல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ் (கே), மிட்சேல் ஸ்டார்க், நதன் லையோன், ஸ்காட் போலாந்த்.இந்திய அணி பேட்டிங்: அதன்படி, தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். தற்போது, கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி 4 ஓவர் முடிவுகளில் 10 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“