இலங்கை
பூநகரியில் விபத்து ; 5 வயது சிறுமி பலி!
பூநகரியில் விபத்து ; 5 வயது சிறுமி பலி!
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
