பொழுதுபோக்கு
வார சம்பளம் ரூ. 1000, ஆனா எனக்கு 10 முத்தம் தரணும்; பிரபல நடிகருக்கு கண்டிஷன் போட்ட பெண் தயாரிப்பாளர்!
வார சம்பளம் ரூ. 1000, ஆனா எனக்கு 10 முத்தம் தரணும்; பிரபல நடிகருக்கு கண்டிஷன் போட்ட பெண் தயாரிப்பாளர்!
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சையிஃப் அலிகான். இவர் நவாப் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராவார். சயிப் அலிகானின் தாயார் சர்மிளா தாகூர் பிரபல திரைப்பட நடிகை ஆவார்.நடிகர் சையிஃப் அலிகான் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘ஆஷிக் அவாரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து இவர் நடித்த ‘யேஹ் தில்லகி’ திரைப்படம் சினிமா கேரியரில் சையிஃப் அலிகானுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.நடிகர் சையிஃப் அலிகான் கடந்த 1991-ஆம் ஆண்டு தன்னை விட வயதில் மூத்தவரான அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாரா அலிகான், இப்ராஹிம் அலிகான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.சையிஃப் அலிகான் – அம்ரிதா சிங் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2004- ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து, நடிகர் சையிஃப் அலிகான், நடிகை கத்ரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 55 வயதாகும் சையிஃப் அலிகான் பாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில், நடிகர் சையிஃப் அலிகான் தான் நடிகரான புதிதில் பெண் தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு விதித்த நிபந்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “வாரம் ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் வார வாரம் ஆயிரம் ரூபாயை வாங்கும் போது தன் கன்னத்தில் 10 முத்தம் கொடுக்க வேண்டும் என்று சையிஃப் அலிகானிடம் பெண் தயாரிப்பாளர் ஒருவர் கூறினாராம்.சையிஃப் அலி கானுக்கு சம்பளம் கொடுக்க முத்தம் கேட்ட அந்த பெண் தயாரிப்பாளர் யாராக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்மையில் நடிகர் சையிஃப் அலிகான் வீட்டில் புகுந்த கொள்ளையன் ஒருவன் அவரை கத்தியால் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
