இலங்கை
டயஸ்போராக்களின் கையில் அநுர அரசு; சாகர கண்டுபிடிப்பு!
டயஸ்போராக்களின் கையில் அநுர அரசு; சாகர கண்டுபிடிப்பு!
டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு டயஸ்போராக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் உதவி வழங்கின. இது இரகசியமான விடயம் அல்ல. இலங்கையின் கலாசாரத்தைச் சீரழிப்பது இத்தரப்புகளின் பிரதான நோக்கமாகும். ஏனெனில் கலாசாரம் சீரழிந்த நாடொன்றை அழிப்பதென்பது மிகஎளிது. வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் டயஸ் போராக்களின் நிகழ்ச்சிநிரலுக்கமைய இந்த அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
