இலங்கை
வரவு-செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் இல்லை!
வரவு-செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் இல்லை!
எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. எதிர் காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளது- என்றார்.
