Connect with us

சினிமா

விஜய்க்கு ஒரு விதமான மனஅழுத்தம்; இது தீராத பழி! அந்தணன் அதிரடி பேச்சு

Published

on

Loading

விஜய்க்கு ஒரு விதமான மனஅழுத்தம்; இது தீராத பழி! அந்தணன் அதிரடி பேச்சு

கரூரில்  41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  மூன்று பேர் கைது   செய்யப்பட்டுள்ளதோடு,  30 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  தற்போது இது தொடர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன்  பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது இல்லை.  இவ்வளவு பெரிய கூட்டம் இருந்தது இதுதான் முதல் முறை.  எம்ஜிஆருக்கு அலை கடல் போல் கூட்டம் திரண்டது.  அங்கு தள்ளுமுள்ளு ஏற்படாத வகை இருந்தது.  ஆனால் இங்கு  கட்டுப்பாடு அற்ற கூட்டமாக இருந்தது தான் இந்த துயர சம்பவம் நடப்பதற்கு காரணம். அந்தக் கூட்டத்தில் தடியடி நடந்ததாகவும், கத்தியை வைத்து கிழித்ததாகவும்  கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்கின்றார்கள்.  அப்படி என்றால் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கும்பல் நுழைந்துள்ளது என்று தான் அர்த்தம். ஆனாலும் இந்த சம்பவம் நடந்த பிறகு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் மௌனமாக ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பியுள்ளார் விஜய். இது மிகப்பெரிய வேதனையாக உள்ளது.  அதன் பின்பு யாரும் அவரிடம் பேசவில்லை. அவர் ஒரு விதமான மன அழுத்தத்தில் இருந்து உள்ளார்.  யாருமே நெருங்க முடியாத அளவிற்கு பெரிய கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில்  பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு விஜய் செல்லக்கூடிய மனநிலை இல்லை என்றால், கட்சியில் இருக்கும் மற்றவர்கள் சென்று இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் விஜயின் வாழ்க்கையில் ஒரு தீராத பழியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன