இலங்கை
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு
கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கைக்குண்டுகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதியிலிருந்து 10 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
